அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பூலோகம் முறைப்படி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 11 நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி முக்கிய நிகழ்வான பூலோக முறைப்படி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. அதன்படி
யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
இதில் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி அம்பாளுக்கு அக்கினி வார்த்து வேத மந்திரங்கள் தமிழ் திருமுறைகள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் கோவில் உள் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.