Skip to content
Home » கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

கல்வி கடன் பெற மாணவர்களுக்கு அரியலூர் கலெக்டர் அழைப்பு…

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு Diploma மற்றும் ITI படிப்பதற்கும், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கும் கல்வி கடன் மேளா/ சிறப்பு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 15.02.2024 அன்று முற்பகல் 09.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

மேலும், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்வது கல்வி கடன் பரிசீலினையை எளிமையாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கல்வி கடன் பெற தேவையான ஆவணங்கள்:

பெற்றோர் மற்றும் மாணவருடைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, சாதி சான்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம் (Councelling Letter), கல்லூரியில் சேர்ந்ததற்கான கடிதம் (Bonafied Cerficate) கல்லூரியின் Approval / Affliation சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!