Skip to content
Home » அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

அரியலூர் தேர்தல் விதி… வட்டிக்கடை, அடகுகடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 27.சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தேர்தல் நடத்தை நெறி விதிகள் தொடர்பாக வட்டிக்கடை (Bankers) / அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தாவது,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வறிப்பின்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் ஆகும். எனவே வட்டிக்கடை (Bankers) / அடகு கடைகள் கீழ்க்கண்ட தேர்தல் நடத்தை நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

அதன்படி வங்கிகள் வேட்பாளர் பெயரில் கணக்குகள் தொடங்க வேண்டும். வேட்பாளர் தொடர்பான எந்தவொரு வங்கி பரிவர்த்தனையாக இருந்தாலும் வேட்பாளர் பெயரில் தொடங்கப்பட்ட கணக்குகளில்தான் பராமரிக்கப்படவேண்டும். வேட்பாளர் கணக்கில் ரூபாய் 10,000/-ற்கு மேல் செலவீனங்கள் மேற்கொண்டிருந்தால் தேர்தல் செலவின பிரிவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு வேட்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பல பல்வேறு வங்கிக் கணக்கிற்கு பண பறிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்த விபரத்தினை தேர்தல் செலவின கணக்கு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து ATM மையங்களிலும் CCTV கேமராக்கள் இயங்குவதை உறுதிசெய்திட வேண்டும்.

ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கி மற்றும் ATM மையங்களுக்கு பண பரிமாற்றம் செய்யும்போது அதுகுறித்து QR Code Generate செய்து அதை சம்மந்தப்பட்ட வண்டி ஓட்டுனரிடம் கொடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் ரூபாய் 15 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனைகள் செய்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகையினை அடகு வைத்து திருப்புதல் தொடர்பாக Token System-த்தில் பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டால் அது குறித்து தேர்தல் செலவின கணக்கு குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட வேண்டும்

இதேபோன்று அச்சகங்கள்,

அச்சகங்கள் கட்சிகள்/ வேட்பாளர்களுக்கு அச்சடித்து கொடுக்கும் வால் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அச்சிட்டு வழங்குதல் தொடர்பாக எண்ணிக்கைகள் குறித்த விபரத்தினை தேர்தல் செலவின குழுவிற்கு தினந்தோரும் தகவல் தெரிவிக்கவேண்டும். அச்சகங்கள் கட்சிகள்/ வேட்பாளர்களுக்கு அச்சடித்து கொடுக்கும் வால் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அச்சிட்டு வழங்குதல் தொடர்பாக தேர்தல் நடத்தை நெறி விதிகளில் குறிப்பிட்டுள்ள அளவுகளில் மட்டும் தான் தயார் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஏதும் செயல்படக்கூடாது. எந்த ஒரு மத உணர்வுகளை துண்டும் வகையில் விளம்பர போஸ்டர்கள் அச்சிடாமாலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தனிப்பட்ட நபரை விமர்சிக்கும் வகையில் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அச்சகங்கள் கட்சிகள்/ வேட்பாளர்களுக்கு அச்சடித்து கொடுக்கும் வால் போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அச்சிட்டு வழங்குதல் வேண்டும். மேற்காணும் விளம்பரங்களில் அச்சடிக்கும் தொடர்புடைய அச்சகங்களின் பெயரினை தவறாமல் குறிப்பிடப்படவேண்டும் என அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்) ஷீஜா (உடையார்பாளையம்), அடகு கடை உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!