அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2ம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் கைலாஷ் வான்கடே மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் / உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் த.மனோகரன் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்றது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து கடந்த 20.03.2026 அன்று முதற்கட்ட தற்செயல் தெரிவு முறை மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவை உரிய பாதுகாப்புடன் 150.ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் /வருவாய் கோட்டாட்சியர் அலுவலக மின்னணு வைப்பறையில் வைக்கபட்டு முத்திரையிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 15.04.2026 அன்று 150-ஜெயங்கொண்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறை வாயிலாக 320 வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒதுக்கீடு செய்தல் மற்றும் இருப்பில் வைக்கப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இணையமுறையில் நடைபெற்றது.
மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மூன்றாம் சுற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைவரின் ஒப்புதலின் பேரில் இறுதி செய்யப்பட்டது. இம்முறையில் 320 வாக்குப்பதிவு மையங்களுக்கும் Ballot Unit, Control Unit, VVPAT மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 64 + 64 Ballot Unit, 64 Control Unit மற்றும் 96 VVPAT ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பட்டியல் இந்நிகழ்வில் கலந்து கொண்ட வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.
