Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்: தேர்தல் சோதனையில் சிக்கிய முன்னாள் அரசு தலைமை கொறடா கார்

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில், சுழற்சி முறையில் 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வாகன பரிசோதனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் சோதனை சாவடியில் தேர்தல் அலுவலர் பிரபாவதி தலைமையில் பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தீவிர சோதனை செய்தனர்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை. ராஜேந்திரன் காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் உள்புறம் மற்றும் காரின் டிக்கியைத் திறந்து பணம் அல்லது பரிசு பொருட்கள் ஏதாவது உள்ளதா? என சோதனை செய்தனர்.
சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் இல்லாததால், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை. ராஜேந்திரன் காரை அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!