Skip to content
Home » அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது 23). இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் நடத்திய சிவில் நீதிப திக்கான தேர்வை எழுதியிருந்த நிலையில், தற்போது அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் அரியலூர் மாவட்டத்தில் முதன்முறையாக 23 வயதில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையை  பெற்றார்  அழகேஸ்வரி.

இந்த தேர்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மொத் தம் 3பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். பாலரத்னா 251 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு அளவில் 211-வது இடத்தை  அவர் பெற் றுள்ளார்.

இவர் திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 5 வருட பி.ஏ. எல்.எல்.பி. படித்துள்ளார்.
மேலும் அதே கல்லூரியில், மேற்படிப்பாக எல்.எல்.எம். படித்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை நடத்தி வந்த பாலரத்னா, சிவில் நீதிப திக்கான தேர்வுக்கு விண்ணப் பித்து, தேர்ச்சி அடைந்துள்ளார். இவருக்கு பல்வேறு அரசு அதிகாரிகள், வக்கீல்கள், கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து பாலரத்னா கூறியதாவது:  கடின உழைப்பின் காரணமாக இந்த வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது. கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந் தால் எதையும் சாதிக்கலாம் என்பது என் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. நான் இந்த தேர்வை முதன்முறையாக எழுதியுள்ளேன். தினமும் சிலபஸ் வாரியாக குறித்து வைத்துக்கொண்டு படிப் பேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தொடர்ந்து எனது பணிகளை சரிவர செய்து, பொதுமக்க ளுக்கு உதவ முயற்சி செய்வேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!