Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூரில் கட்டிட திறப்பு விழா-பொதுப்பேரவை கூட்டம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தொன்போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் , பொன்விழா கட்டிடத் திறப்பு விழா மற்றும் ஆண்டுப் பொதுப்பேரவைக் கூட்டம் நடந்தது. இப்பேரவை கூட்டம் அருள்திரு அகிலன் சர்பிரசாதம் தலைமையில், அருள்திரு பிரான்சிஸ் கமாலியேல், அருள்திரு செபாஸ்டின் ஜேக்கப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,

வரதராஜன்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், வரதராஜன்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் ப.எட்வின் ஆர்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், பேரூர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!