Skip to content
Home » ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

ஒரே இடத்தில்… விசிக, பாஜக பிரசாரம்….. மீன்சுருட்டியில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சி ராணி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவிற்கு ஒரு வாரம் காலம் மட்டுமே உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தனது பிரச்சாரங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

இதற்கு பதில் அளித்து பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்றத்தில் 69 விவாதங்களில் தான் பேசி உள்ளதாகவும், ஆறு தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் கூறிவருகிறார்.

பிரசார களத்தில்  எதிரெதிர் துருவங்களாக உள்ள விசிக மற்றும் பாஜக கட்சிகள், ஒரே இடத்தில்  இன்று  பிரசாரம் செய்கிறார்கள். இதனால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை 8 மணிக்கு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலனக்குழி கிராமத்தில்  பிரசாரம் செய்தார். அவர் காடுவெட்டி, எறவங்குடி, கொடுகூர், இடையங்குறிச்சி, கல்லாத்தூர், சின்னவளையம், ஜெயங்கொண்டம் நகரம், உடையார்பாளையம் நகரம் உள்ளிட்ட 94 இடங்களில் இன்று தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி இன்று மதியம் 2.50 மணிக்கு அதே மீன் சுருட்டி மேல னக்குழியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் மேலனக்குழி, காடுவெட்டி, எறவங்குடி, சின்னவளையம், ஜெயங்கொண்டம்

நால் ரோடு, சுத்தமல்லி, காசாங் கோட்டை, சாத்தம்பாடி, விக்கரமங்கலம் வழியே சென்று, மீண்டும் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள 8 வார்டுகளிலும் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இரவு10 மணிக்கு பிரச்சாரத்தை முடிக்கின்றார்.

விசிக மற்றும் பாஜக வேட்பாளர்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஒரே நாளில் ஒரே இடத்தில் காலையும், மதியமும் பிரசாரம் மேற்கொள்வதால், பிரசார பயணத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!