Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் – அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

அரியலூர் -அரசு பள்ளி சுவற்றை ஆக்கிரமித்த ஜனநாயகன் பட போஸ்டர்

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடித்த கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் தேர்தலுக்கு முன்பு பல்வேறு சர்ச்சையில் சிக்கியதால் வெளிவர முடியாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதலமைச்சர் விஜய்யாக பதவியேற்று இரண்டு மாதங்களில் அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் நாளை வெளியாகிறது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே போஸ்டர் மற்றும்

பேனர்களை வைத்து முதலமைச்சர் விஜயின் கடைசி ஜனநாயகன் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நேற்று இரவு ஜனநாயகன் படத்திற்கான போஸ்டர்கள் காம்பவுண்ட் சுவர் முழுவதும் ஒட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குள் செல்லும் வாசலின் இருபுறங்களிலும் ஜனநாயகன் பட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெற்றோர்கள் மற்றும் சமூக

ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் கண்களில் இவ்வகையான பட போஸ்டர் படும்போது அவர்களின் எண்ணங்கள், சிந்தனைகள் மாற வழி ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழலும் ஏற்படும். மேலும் அரசு காம்பவுண்ட் சுவற்றில் குறிப்பாக பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் யாரும் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என அரசு விதி இருந்தும் அந்த விதியை மதிக்காமல் இவ்வகையான பட போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் பள்ளி மாணவ மாணவிகளை தொடர்ந்து சினிமா கவர்ச்சியில் கட்டி போடும் தந்திரமாகவும் பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் சினிமா போஸ்டர் ஒட்டி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

error: Content is protected !!