Skip to content
Home » 2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

2021-22ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டக் கலை மன்றம் வாயிலாக 2021-22ஆம் ஆண்டில் கலை விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது மற்றும் விருதிற்கான பொற்கிழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கி, சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்த விளையாட்டில்  18-வயதிற்குட்பட்ட நாடகக் கலைஞர் கலை பிரிவில் மு.எழிலரசன் என்பவருக்கும், குரலிசை கலை பிரிவில் செல்வி.ஜெ.நட்சத்திரா என்பவருக்கும், நாதசுரக் கலைஞர் கலை பிரிவில் செல்வன்.த.டெனிஸ் அருண் என்பருக்கும் கலை இளமணி விருதும் மற்றும் ரூ.4,000 விருதிற்கான பொற்கிழிகளும்;, 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட புல்லாங்குழல் கலை பிரிவில் க.காமேஸ்வரன் என்பவருக்கும், வீணைக் கலைஞர் கலை பிரிவில்

ஜெ.தாரணி என்பவருக்கும், நாதசுரக் கலைஞர் கலை பிரிவில் பெ.பிரபாகரன் என்பவருக்கும் கலை வளர்மணி விருதும் மற்றும் தலா ரூ.6,000 விருதிற்கான பொற்கிழிகளும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட நாடக் கலைஞர் கலை பிரிவில் த.சாமிதுரை என்பவருக்கும், சிலம்பாட்டம் கலை பிரிவில் க.செல்வகுமார் என்பவருக்கும், காவடி ஆட்டம் கலை பிரிவில் அ.கலைமணி என்பவருக்கும் கலைச் சுடர்மணி விருதும் மற்றும் மற்றும் தலா ரூ.10,000 பொற்கிழிகளும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட நாதசுரக் கலைஞர் கலை பிரிவில் க.செல்வராஜ் என்பவருக்கும், தவில் கலைஞர் கலை பிரிவில் க.பிரகலாதன் என்பவருக்கும், நாடகக் கலைஞர் கலை பிரிவில் க.அண்ணாதுரை என்பவருக்கும் கலை நன்மணி விருதும் மற்றும் தலா ரூ.15,000 பொற்கிழிகளும், 66 வயதிற்கு மேற்பட்ட நாடகக் கலைஞர் கலை பிரிவில் கோ.பழனிச்சாமி என்பவருக்கும், கு.சுப்பிரமணியன் என்பவருக்கும், நாதசுரக் கலைஞர் கலை பிரிவில் சா.ஜெயராமன் என்பவருக்கும் கலை முதுமணி விருதும் மற்றும்; தலா ரூ.20,000 விருதிற்கான பொற்கிழிகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 44 குழந்தைகளுக்கு, அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரை 9 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்ட காலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.14.76 இலட்சம் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் நீலகண்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!