Skip to content
Home » ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

ஆஷஸ் முதல் டெஸ்ட்…. ஆஸ்திரேலியோ வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.  கடைசி நாளானநேற்று  ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் 5வது  நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி நடைபெற்ற பர்மிங்காமில் மழை பெய்ததால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற பின் போட்டி தொடங்கியது. முடிவில் ஆஸ்திரேலியா அணி 92.3 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்டு பிராட் 3 விக்கெட்டுகளும், ராபின்சன் 2 விக்கெட்டுகளும், மொயின் அலி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் வருகிற 28-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!