Skip to content
Home » ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

ஆசியப்போட்டி….. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 4ம் இடம்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில்  காலை 9.40 மணியளவில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்த பதக்கங்களையும் சேர்த்துஇந்தியா தற்போதுவரை 8 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.

இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 242.1 புள்ளிகள் பெற்று இந்திய வீராங்கனை பலாக் தங்கம் வென்றார். இஷா சிங் 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வீராங்கனை 218.2 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!