Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, நக்கம்பாடி, வஞ்சனபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சொக்கநாதபுரம் கிராமத்தில் சாலையில் இருபுறமும் நின்ற பெண்கள், ஆரத்தி எடுத்து திருமாவளவனை வரவேற்றனர்.
பிரச்சாரத்தின் போது பேசிய திருமாவளவன், பானை சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகின்றேன். அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார். புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதுதான்

பாஜகவின் நோக்கம், எனவே அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தவும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என கேட்டுக்கொண்டார்.
போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சொக்கநாதபுரம் கிராமத்தில் உள்ள மூன்று குழந்தைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பெயர் சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!