Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.24 லட்சத்துடன் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து எடுத்துச்சென்ற திருடர்கள்…

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். அப்போது அந்த எந்திரத்தில் 24 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த திருட்டு பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரும்பு சங்கிலி மூலம் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து, திறந்த ஜீப்பில் ஏற்றி சென்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!