திருச்சியில் ரயில்வே அதிகாரி மீது தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது
திருச்சி கிராப்பட்டி அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (46). இவர் ரயில்வே துறையில் கமர்சியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ளது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த தென்னூர் ஹிதாயத் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் பாட்ஷா (28 )
திட்டி உள்ளார். மறுநாள் மீண்டும் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள அதே டீக்கடையில் சிவராமன் நின்று கொண்டிருந்தார் அப்போது கமல் பாட்ஷாவின் நண்பரான தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த முகமது ஹவுஸ் (25 )என்பவர் அங்கு வந்துள்ளார் பின்னர் சிவராமனை கெட்ட வார்த்தையால் திட்டி கீழே தள்ளிவிட்டார் இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் இது பற்றி சிவராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கமல் பாஷா மற்றும் முகமது கௌஸ் ஆகிய இரண்டு பேரையும் கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி திடீர் மாயம்
திருச்சி துவாக்குடி மலை பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (55) பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது மூத்த மகள் ஒருவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம் பி ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக தனது பாட்டி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்த அவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து சைகந்தர் கேகே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி இபி ரோடு பூலோகநாதர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் ஆறுமுகம் (வயது 24) கூலித் தொழிலாளி மதுவுக்கு அடிமையான இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இது பற்றி அவரது தாயார் தேவகி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயிறு அறுந்து பெயிண்டர் கீழே விழுந்து பலி
திருச்சி பாலக்கரை தர்மநாதபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50) இவர் திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் இரண்டாவது தெரு பகுதியில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டார் .
கட்டிடத்தின் வெளிப்பக்க சுவரில் கயிற்றில் தொங்கியவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கீழே விழுந்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது சக தொழிலாளிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது பற்றி அவரது மனைவி வினோலியா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை மாத்திரைகள் விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
ஸ்ரீரங்கம் ஜே ஜே நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் விரைந்து சென்று அங்கு கோதை மாத்திரை விற்றுக் கொண்டிருந்த ஜே ஜே நகர் என் பிளாக் பகுதியைச் சேர்ந்த குணா என்கிற குணசேகர் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் குணாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர் சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவத்தில் கைதான நபர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
