கேரளாவின் எர்ணாகுளம் பெரும்பாவூரில் 14 வயது சிறுமி மீது கொலை முயற்சி நடந்துள்ளது. போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது அட்னான், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்க முயற்சித்துள்ளார். தற்காத்துக் கொள்ள முயன்ற சிறுமிக்கு கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அண்டை வீட்டாரையும் தாக்கிய முகமதுவை, மக்கள் உதவியுடன் காவல்துறையினர் புதரில் மறைந்திருந்தபோது கைது செய்தனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்து சிறுமியை கொல்ல முயற்சி
