Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2டெஸ்டில் தோல்வி….ஆஸி. கேப்டன் நாடு திரும்பினார்

, இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளனர். நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக சிட்னி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கம்மின்ஸ் நாடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!