திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் (50) என்பதையும், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதையும் முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் குடும்பத்தினருடன் வசிக்கவில்லை என்றும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
