Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அவர் தயாரித்துள்ளார் . இந்நிலையில்,  நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கஷ்ட காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் என்று மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!