Skip to content
Home » அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு:…ராட்சச பலூன், செல்பி பாயிண்ட், பேரணி

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா
பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்துகொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றையதினம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500 நபர்கள் வாக்காளர் உறுதிமொழியான சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம், மதம், இனம், சாதி, வகுப்பு. மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு துண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், “எனது ஓட்டு எனது பெருமை” (MY VOTE MY PRIDE APRIL 19) என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!, என் ஓட்டு! என் உரிமை செல்பி கார்னரில் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என் ஓட்டு! என் உரிமை செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா துவக்கி வைத்து, பேரணியில் கலந்துகொண்டார். மேலும் இப்பேரணியில் கிராமிய கலைக்குழுவினர்கள்

பங்கேற்று கலைநிகழ்ச்சிகள் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பேரணியில் வட்டார மருத்துவர்கள், செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500 நபர்கள் ஒரு கி.மீ நீளத்திற்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி, செந்துறை சாலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அஜித்தா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி, அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்ராமகிருஷ்ணன், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராமலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!