Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆயுத பூஜை விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

ஆயுத பூஜை விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆயுத பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பயணிகள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.

பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்களின் அவசியத் தேவையைச் சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.

வழக்கமான நாட்களில் சாதாரணக் கட்டணங்களில் இயக்கப்படும் பேருந்துகள், தற்போது விடுமுறை நாட்களையொட்டி பயணிகளின் தேவைக் அதிகரித்துள்ளதன் காரணமாகக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வழக்கமாக ரூ.1,800 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது உயர்ந்து ரூ.3,420 ஆக விற்கப்படுகிறது. இதேபோல், சென்னை – நெல்லை வழித்தடத்தில் ரூ.1,399ல் இருந்து ரூ.3,000 ஆகவும், சென்னை – மதுரைக்கு ரூ.2,500 வரையிலும், சென்னை – கோவைக்கு ரூ.3,500 வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வோர் தவிக்கின்றனர்.

error: Content is protected !!