Skip to content
Home » அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டில்லியில் காத்திருப்பு போராட்டம்..

விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினர், பிற்படுத்தப்பட்டோர்களை ஏமாற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் கொள்ளை அடிக்கும் மத்திய அரசையும், இவர்களை ஏமாற்றி சர்பாசி, ஆர்பிட்ரேசன்(Arbitration Act) சட்டத்தின்படி கொள்ளையடித்து விவசாய குடும்பத்தை அழிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களை எதிர்த்தும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க கோரியும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது என்று அமைதி காத்திருப்பு போராட்டம் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

பாரத பிரதமர் மோடி 25% சதவீத இந்திய மக்கள் வறுமையில்லாமல் வாழ்வதாக கூறி ஏமாற்றுகிறார். அயோத்தி ராமர் பெயரை சொல்லி ஏமாற்றி ஏழைகள் விவசாயிகளின் ஓட்டை பெற்று ஏமாற்றலாம் என்று எண்ணுபவர் ராமர் கோவில் திறப்பு விழாவில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை.
நாட்டின் முதல் குடிமகள் ஜனாதிபதி பாரத ரத்னா விருது வழங்க அத்வானி வீட்டிற்கு சென்ற பொழுது அத்வானியும், மோடியும் நாற்காலியில் அமர்ந்திருக்க ஜனாதிபதி நின்று இருப்பது, பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை அல்லவா..?
டெல்லியில் 3600 IAS அதிகாரிகளில், மக்கள்தொகையில் 3% உள்ள உயர் ஜாதியினர் 2900 IAS அதிகாரிகள் உள்ளனர். இதனால், மோடி ஆட்சியில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுதப்பட்டோர் வஞ்சிக்கப்படவில்லையா? ஏன் பிரதமர் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. ஜனத்தொகையில் 3 சதவிதமுள்ள உயர் சாதியினர் 90% சதவீத அரசு வேலையில் உள்ளார்கள், நாட்டின் வருமானத்தில் உயர் சாதியினருக்கு 90% சதவீதம் வருமானத்தை சம்பளமாக கொடுப்பது நியாயமா..? 5000ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கூட ஒரு IAS அதிகாரியின் 1 மாத சம்பளத்தின் அளவிற்குகூட ஆண்டு வருமானம் விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை.
1970-ம் ஆண்டில் 60 கிலோ நெல் ரூ.40/-யும், வங்கி மேலாளர் மாத சம்பளம் ரூ.150/-யும், MLA மாத சம்பளம் ரூ.250/-யும், வாத்தியார் மாத சம்பளம் ரூ. 90/-யும் இருந்தது.
2024-ம் ஆண்டில் நெல் ரூ.1320/-யும், வங்கி மேலாளர் சம்பளம் ரூ.1,30,000/-யும், MLA சமபளம் ரூ.1,05,000/-யும், வாத்தியார் சம்பளம் ரூ.1,00,000/-யும் இருக்கிறது.
இதுதான் ஜனநாயக நாட்டின் நியாயமா..?
500 கார்ப்பரேட் கம்பெனி வங்கியில் வாங்கிய கடன் ரூ.30 இலட்சம் கோடி, அந்த கடன் முழுவதையும் மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
ஆனால், 95 கோடி விவசாயிகள் வாங்கிய ரூ.1 இலட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
இந்திய ஜனத்தொகை 140 கோடியில் விவசாயிகள் 95 கோடி பேர் உள்ளனர், இதில் இந்து விவசாயிகள் 90 கோடி பேர் உள்ளனர், உயர் ஜாதி இந்துக்களை காப்பாற்றும் மோடி ஏழை இந்து விவசாயிகளை காப்பாற்ற மறுப்பது நியாயமா..?
2019-ல் ஒரு கிலோ நெல் ரூ.18/-க்கு விற்றதற்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை ரூ. 54/- தருவதாக கூறிவிட்டு ரூ.22/- மட்டும் கொடுக்கலாமா..?
2019-ல் ஒரு டன் கரும்பு ரூ.2700/- விற்றதற்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை ரூ.8100/- தருவதாக கூறிவிட்டு ரூ.3150/- மட்டும் கொடுக்கலாமா…?
இந்த அநியாயத்தை கேட்டால், விவசாயிகளை கேவலமாக பேசுவது, சுட்டு தள்ளுவது, ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு போக கூடாது என்பது, ஜனநாயக நாட்டில் இது நியாயமா..? மோடி தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மாட்டாரா..? என்ன நிச்சயம்..
அரசு ஊழியர்கள் எங்கள் அண்ணன், தம்பி, மாமா, அக்கா, தங்கைகள் தான், அவர்களுக்கு ரூ.100/- சம்பள உயர்வு

கொடுத்தால் விவசாயிகளுக்கு ரூ.10/- கொடுங்கள் என்றால் ரூ.3/- கொடுப்பது நியாயமா..?
பெண் கூலி ரூ.0.50 பைசாவில் இருந்து ரூ.250-ஆகி 500 மடங்கு ஏறிவிட்டது,
ஆண்கள் கூலி ரூ.1.50 இருந்து ரூ.750/- ஆகி 500 மடங்கு ஏறிவிட்டது.
உரம் விலை பொட்டாசியம் ரூ.20 இருந்து ரூ.1700/- ஆகி 85 மடங்கு ஏறிவிட்டது. நெல் விலையோ ரூ.40 இருந்து ரூ.1320 ஆகி 33 மடங்கு ஏறிவிட்டது. கரும்பு ஒரு டன் ரூ.90-ல் இருந்து ரூ.3150/-ஆக 35 மடங்கு ஏறியுள்ளது. பிச்சைக்காரன் வருமானம் கூட ரூ.1-ல் இருந்து ரூ.500/-ஆகி 500 மடங்கு ஏறியுள்ளது.மோடி 95 கோடி விவசாயிகள் பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழும் பொழுது விவசாயிகளுக்கு மாதம் ஓயவூதியம் ரூ.5000/-க்கு பதில் ரூ.500 கொடுப்பது நியாயமா..? எப்படி 25% மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளதாக பொய் கூறலாம்.மோடி பொய் சொல்லி விவசாயிகளை ஏமாற்றாமலும், ராமரை காண்பித்து ஓட்டை பெற்றும், ஓட்டு மிஷின் தயவில் மூலமாக வெற்றியடையலாம் என்று நினைப்பை விட,
விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க கோரியும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது என்பதற்க்காகவும், சர்பாசி, ஆர்பிட்ரேசன்(Arbitration Act) சட்டத்தின் மூலம் விவசாயிகள் நிலத்தை கொள்ளையடிக்காமல் இருக்க வேண்டியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!