Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை…

கும்பகோணம் – திருவையாறு நெடுஞ்சாலையில் அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் உள்ளது. அய்யம்பேட்டை – கணபதி அக்ரஹாரம் செல்கின்ற சாலை சுமார் 2 கி.மீட்டர் தூரம் உடையது. பல மாதங்களுக்கு முன்பு கணபதி அக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு சாலை எதுவும் அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு காயப் படுகின்றனர். பல மாதங்களாகியும் இந்தச் சாலையை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.இதனால் இந்தச் சாலை வழியே செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தினந்தோறும் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து விடுகின்றனர்.
எனவே இந்தச் சாலையை உடனே சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!