Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் மனு….. தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அவருக்கு 21 நாள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியது. அவர் மேலும் 1 வாரம் ஜாமீனை நீட்டிக்க கேட்டு   உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை அவசர மனுவாக  விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முக்கிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரி முதல்வர் கெஜ்ரிவாலின் மனுவை பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி தகுந்த முடிவை எடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!