Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை கரையை கடந்த பிறகு 2 நாட்கள் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனை அடுத்து மீண்டும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தற்போது புயலாக வலுப்பெற்றது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக  பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!