Skip to content
Home » 2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

கடந்த ஆண்டு நவம்பரில் பீகாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது.  ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பீகாரின் சம்ஸ்திபூர் பகுதியில் 2 கி.மீ. தொலைவிற்கு ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சம்ஸ்திபூர் அருகே பாண்டூல் ரயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு செல்ல ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டதால் அந்த ரயில் தண்டவாளம் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டி ருந்த தண்டவாளம் திருடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக 2 ரயில்வே அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!