தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்தவாறு திருச்சி சாலையில் பயணம் செய்த நிகழ்வுகள் அரங்கேறின. அந்த வகையில் பைக்கின் முன் பகுதியில் பட்டாசை வெடித்தப்படி சாலையில் இளைஞர் வீலிங் செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான முறையில் வீலிங் செய்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வீலிங் செய்தவர் தஞ்சை மணிகண்டன் என்றும், அதை வீடியோ எடுத்து பதிவிட்டவர் கல்லாங்காடு அஜய் என்றும் தெரியவந்துள்ளது. மணிகண்டன் மீது தஞ்சையில் பல வழக்குகள் உள்ளன. எனவே அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.