கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோழிகள் உயிரிழந்த சம்பவத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகள் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 கோழிப் பண்ணைகளில் கோழிகளை அழிக்க கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோழிகளைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
