சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்க மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நேற்று (அக்.26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த பெண் நிர்வாகிகளுக்கு மதிய உணவாகச் சுடச்சுட சிக்கன் பிரியாணி, முட்டை, பிரெட் அல்வா மற்றும் சைவ உணவுடன் கூடிய பிரம்மாண்ட விருந்து உபசரிக்கப்பட்டது. இதுகுறித்தான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பெண் நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து…
