Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

களைத்திடு… களைத்திடு….. எழுத்துபிழையுடன் மதுரையில் பா.ஜ.க. போராட்டம்

மதுரை மாநகராட்சியை கலைத்திட வலியுறுத்தி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கலைத்திடுக’ என்பதற்கு பதில் ‘களைத்திடுக’ என்ற எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் எழுத்துப்பிழையுடன் ஒட்டப்பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி மதுரை மாநகராட்சியை கண்டித்து பாஜகவினர் நடத்திய போராட்டம் அங்கிருந்தவர்கள் கவனத்தை பெற்றது. முன்னதாக, மதுரை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா மாநகராட்சியை கலைக்கக்கோரி கோஷம் எழுப்பினார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்கோஷம் எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!