Skip to content
Home » பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

  • by Senthil

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.கழகத்தால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இன்று  விமானத்தில் தூத்துக்குடி  வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அப்போது கனிமொழி  கூறியதாவது:

மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்து இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு பணியாற்றிய போது எனக்கு எல்லா வகைகளிலும் உறுதுணையாக, இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களை தெரிந்து கொள்வதற்காக இங்கே இருக்கக்கூடிய பணிகளுக்கு எனக்கு உறுதுணையாக நின்று உதவி செய்திருக்கக்கூடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன், அமைச்சர் கீதா ஜீவன்,

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, அதேபோல காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, அதேபோல இந்த பகுதியில் இருக்கக்கூடிய அதனைக் கழக நிர்வாகிகள், கூட்டணி இயக்கங்களைக்  சேர்ந்த சகோதர சகோதரிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பகுதியிலே எப்பொழுதுமே தண்ணீரில்  பிரச்சனையாக இருக்கிறது.  தூத்துக்குடி தொகுதியின் ஒரு பகுதியான விளாத்திகுளம் வரை இருக்கக்கூடிய தண்ணீர் பிரச்சினையை சரி செய்வதற்காக 363 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு  குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு துவங்கப்பட்டது. இன்று அது நிறைவடைய கூடிய ஒரு நிலையில் இருக்கிறது.

அதே போல திருச்செந்தூர் பகுதி, அதைச் சுற்றி இருக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் தண்ணீர் கொண்டுவருவது, சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரு மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து இருக்கக்கூடிய நிலையில் மிக விரைவிலே அந்த  குடிநீர்  திட்டமும் நிறைவேற்றித் தரப்படும். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து வின்பாஸ்ட் நிறுவனத்துக்கு 16 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு இன்று அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வின்பாஸ்ட் நிறுவனமும் முக்கியமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இளம் பெண்களுக்கு ஒரு ட்ரெயினிங் கொடுத்து இங்கே இருக்கக்கூடிய அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தருவோம் என்று உறுதியைத்  முதல்வரிடம் தந்திருக்கிறார்கள் . அதே போல இன்னும் பல நிறுவனங்களை விரைவிலேயே தூத்துக்குடிக்கு கொண்டு வரவேண்டும் முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் இருக்கிறார்கள். அதனால் விரைவில் தூத்துக்குடி மறுபடியும் ஒரு புகழ்பெற்ற தொழில் நகரமாக விளங்கும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

நீட் தேர்வுக்கு ஆட்சி மாற்றம் வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் இன்று கூட வந்து நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு  நடத்திக்கொண்டு தான் இருக்ககிறது.  நிச்சயமாக ஆட்சி மாற்றம் வந்து ஒன்றியத்தில் உருவாகும் பொழுது தமிழ்நாட்டிலிருந்து நீட் விலக்கப்படும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை யாரும் கேள்வி கேட்கலாம், பத்து வருஷமா ஆட்சியிலிருந்தபொழுது மக்களுக்கு எதையுமே செய்யாத ஒரு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது.

மக்களுக்கு எதிரான பாஜக கொண்டுவந்த அதனை மசோதாக்களும், அதை ஏற்றுக் கொண்டு அதற்காக அது வெற்றி பெறுவதற்கான வாக்களித்த இயக்கம்தான் அதிமுக. அப்பொழுது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!