Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவிரி விவகாரம்… கும்பகோணத்தில் 16ல் பாஜக உண்ணாவிரதம்

தமிழகத்திற்கு  காவிரி நீர் தர மறுத்த கர்நாடகத்தை கண்டித்தும், அதைப்பெற்றுத்தர தவறிய  மத்திய அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு, மறியல் நடக்கிறது.  வெற்றிகரமாக இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெறவில்லை. மற்ற கட்சிகளின் விவசாய சங்கங்கள், வணிகர்கள் இணைந்து இதனை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக சார்பில் வரும்  16ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கருப்பு  முருகானந்தம் தலைமை தாங்குகிறார்.  இந்த தகவலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!