Skip to content
Home » பணக்கார கட்சிகளில் பா.ஜ.க. முதலிடம்

பணக்கார கட்சிகளில் பா.ஜ.க. முதலிடம்

  • by Senthil

தேர்தல் சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தணிக்கைசெய்யப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கைகளின்படி, அரசியல் கட்சிகளின் வருவாய் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எட்டு தேசிய கட்சிகளில் மத்தியில் ஆளும் பாஜகதான் பணக்காரக் கட்சிகளில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் திரிணாமுல் கட்சி, 633 சதவீதம் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. பாஜகவோ 155 சதவீத கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது என்கிறது, தேர்தல் ஆணையப் புள்ளிவிவரம். பாஜக கடந்த ஆண்டில் 1917 கோடி ரூபாயும், அதற்கு முந்தைய ஆண்டில் 752 கோடி ரூபாயும் வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 545 கோடி ரூபாய் ஈட்டிய திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி, முந்தைய ஆண்டில் 74 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டியிருந்தது. மாநிலக் கட்சிகளில் திமுக 318.75 கோடி ரூபாய் ஈட்டி, முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!