Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் பாஷா (27) என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அபுதாகிர் பாஷாவை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அபுதாகிர் உடல் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். கொலைக்கு தொழில் போட்டி காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்த முழுமையான விபரங்கள் போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகே முழுமையாக தெரியவரும்.

error: Content is protected !!