உத்தரப்பிரதேசத்தின் லக்னோவிலிருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் சென்ற இண்டிகோ விமானத்தில் ‘வெடிகுண்டு’ என எழுதப்பட்ட குறிப்பு கண்டெடுக்கப்பட்டதால், நேற்று விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகளுக்குப் பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
