Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

11 குழந்தைகளுக்கு வீரதீர செயல் விருது….. ஜனாதிபதி வழங்கினார்

குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும், மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு  குழந்தைகளுக்கான வீர தீர செயல் விருது வழங்கப்படுகிறது.  ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிக்ழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் மோடி இன்று  கலந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!