திருச்சி மாநகர் புதூர் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமன்றி புதுக்கோட்டை ,கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் மகப்பேறு,
எலும்பு முறிவு, நரம்பியல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக தனது மனைவியை தொழிலாளி ஒருவர் சேர்த்துள்ளார்.
அப்போது பணியாளர்கள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் .
அதில் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தால் ரூபாய் 5000 இல்லாமல் வரக்கூடாது அங்குள்ள ஒவ்வொரு பணியாளரும் லஞ்சம் கேட்பதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில்
வைரலானதை தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்கள் பதிவாகியிருந்த காட்சி அடிப்படையில் இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
