இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமானபிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இரு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது. மற்றொன்று பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த பெண்ணின் தந்தை, தனது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக பல்டி அடித்தார்.
