Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கியாஸ் டேங்கர் மீது பஸ் மோதி கோர விபத்து-10 பேர் பலி

கியாஸ் டேங்கர் மீது பஸ் மோதி கோர விபத்து-10 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் டுர்பெட் நகரில் இருந்து கராச்சி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. குவாடர் மாவட்டம் பசால் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த கியாஸ் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் பஸ் தீப்பற்றி எரிந்தது. பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

error: Content is protected !!
Secret Link