Skip to content
Home » பஸ்களில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது…

பஸ்களில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது…

  • by Senthil

மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில், பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் ஏறும்போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென்ற வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

 இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மா.போ.கழகப் பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது. அவர்கள் பயணச்சீட்டினை பெற தரும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

அதோடு, பணிமனைகளில் பணியின்போது நடத்துனர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை (Imprest amount) பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்திடவும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து அவர்களிடத்தில் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகார்கள் ஏதும் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் எதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு போக்குவரத்துறைத் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!