ஒருநாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம் என்பார்கள். ஜப்பான் குமாரின் வாழ்க்கையும் அப்படித்தான் மாறியிருக்கிறது. கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ எடு என வடிவேலு சொன்னவுடன் உருட்டுக்கட்டைகளுடன் வரும் இவரை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். 90-களில் பிஸியான டான்ஸராக, நடிகராக வலம் வந்த ஜப்பான் குமார், தற்போது வாய்ப்புகள் இல்லாத காரணங்களால் வடபழனியில் சின்ன ஹோட்டல் நடத்தி வாழ்ந்து வருகிறார் .இதைபார்க்கும்போது உழைப்பு மட்டும் தான் நிரந்தரம். வாழ்த்துக்கள் மாஸ்டர் ஜப்பான் குமார்.
