தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு 6 மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டியை சேர்த்து மொத்தம் 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகள் விவரம் வருமாறு:
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகியநான்கு சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக் கின்றன.
அதேபோன்று, பீகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு,இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா,ஹமிர்பூர், நலகார்க், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலுமே வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடக்கிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலுமே வரும்1 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.