மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதியில் நாதக வேட்பாளர் ஜானகிராமன் 903 வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் நாதக வேட்பாளர் கார்த்திகா 1,891 வாக்குகளும் பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது நாதக பின்னடைவைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இறுதி முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இடைத்தேர்தல்.. மதுராந்தகம், தாராபுரத்தில் நாதக தொடர் பின்னடைவு
