தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க திரண்டனர். இந்த மனுவில் அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் உடனே நிறுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல்ல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை முறையீடு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜ் மாவட்ட செயலாளர் விஷ்ணுவரதன் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.