தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 27,649 வாக்குகளும், மதுராந்தகரத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 31,067 வாக்குகளும் பெற்று முன்னிலை வகிக்கின்றனர். இதனால் கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு இடங்களிலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக பனையூர் அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள்
