பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே பாட்டியாலா-சங்ரூர் பைபாஸ் சாலையில் உள்ள பக்ரா கால்வாய் பாலம் இன்று (நவ.19) அதிகாலை 5.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தைக் கடந்து சென்ற 2 லாரிகள் இடிபாடுகளில் சிக்கின. ஒரு லாரியில் தீப்பிடித்த நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இரு லாரி ஓட்டுநர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிகிறது. தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்பில் கால்வாய் பாலம் இடிந்து விபத்து.. 2 லாரிகள் சிக்கின
