Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்று அழைக்கப்படும் இந்த மருந்தை ‘ரோச் பார்மா இந்தியா (Roche Pharma India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நோய் எதிர்ப்பு சிகிச்சை முறையை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நரம்பு வழியாக (IV Infusion) குளுக்கோஸ் மூலம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை செலுத்தப்படும்.

ஆனால், இந்த மருந்து தற்போது தோலின் கீழ் வெறும் 7 நிமிடங்களில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவான நுரையீரல் புற்றுநோய் வடிவமான Non-Small Cell Lung Cancer – NSCLC:-ஆல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக இந்த சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.3.70 லட்சம் ஆகும். மேலும் பல நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது சுமார் 6 டோஸ்கள் வரை தேவைப்படும்.

இந்த ஊசியின் அறிமுகம் புற்றுநோய் பராமரிப்பில் இம்யூனோதெரபியின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி, ஆரோக்கியமான செல்களையும் சேதப்படுத்தும் கீமோதெரபி போல் இல்லாமல், இம்யூனோதெரபி என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது.

கீமோதெரபியைவிட குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் பல நோயாளிகள் இம்யூனோதெரபியையே விரும்புகிறார்கள். இருப்பினும், ஏற்கெனவே அதிக செலவாகும் புற்றுநோய் சிகிச்சையால் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்த சிகிச்சையின் அதிக விலை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

error: Content is protected !!