பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தி உள்ளார்
நெதர்லாந்து நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாகச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள் அந்நாட்டு அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் கி.பி. 985 முதல் 1014 வரை

ஆட்சி செய்த மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழர்களின் ஆட்சிக் காலத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. இதில் சோழர் காலத்தில் நீர் நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், சோழர்களின் வெற்றிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
இது குறித்து கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான கோமகன் கூறும்போது தோழர்களின் பெருமைகள் ஆட்சி முறைகள் குறித்து வருங்கால

சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் நெதர்லாந்து நாட்டின் பாதுகாக்கப்பட்டிருந்த சோழர் காலத்திய செப்பேடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது..
செப்பேட்டின் மூலம் புத்த மதத்திற்கும் வைனவத்திற்கும் எப்படி ஒரு நல்லிணக்கம் இருந்தது, சோழர்களின் நிதி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகங்கள் எப்படி இருந்தன சோழ மன்னர்களின் வரிசை பட்டியலும் இந்த செப்பேட்டில் உள்ளதாக தெரிகிறது அப்படிப்பட்ட செப்பேட்டை மாமன்னன் ராஜேந்திர சோழன் அவரது தந்தை ராஜராஜ சோழன் 1005 ஆம் ஆண்டு ஆணையாக பிறப்பித்தார்கள் ஆனால் செப்பேட்டில் பதியப்படவில்லை. அவர் 1014ல் உயிரிழந்த பிறகு அவரது மகனான ராஜேந்திர சோழன் தான் இந்த செப்பேட்டை பதிவு செய்தார். ராஜேந்திர சோழனின் மிக சிறப்பான ஆட்சி முறை இந்த செப்பேட்டில் உள்ளது. அதனால் தான் மாமன்னர் ராஜேந்திர சோழனால் தலைநகராக உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் தலைநகராக உள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அந்த செப்பேட்டை பொதுமக்கள் பார்வைக்கு நிரந்தரமாக கொண்டு வர வேண்டும். அப்படி காட்சிப்படுத்தப்படும் போது சோழ வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ள பயன்படும். எனவே இந்த செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் இருப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அருங்காட்சியகத்தில் முடங்கிப் போனால் அது பொது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடும் என்பதால் தான் சோழர் வரலாற்று ஆவணமாக இருக்கக்கூடிய செப்பேடு கக்கைகொண்ட சோழபுரத்தில் தான் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.
