Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது தாய்லாந்திலிருந்து சென்னை வந்த கேரளா இளைஞர் ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த பயணி ரூ. 10 கோடி மதிப்பிலான மண் இல்லாமல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்படும் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள், தனி இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்

சென்னை விமான நிலையத்தில் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தாய்லாந்திலிருந்து சென்னை வந்த விமான பயணி ஒருவரிடம் இருந்து 10 கிலோ அளவிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது தாய்லாந்திலிருந்து சென்னை வந்த கேரளா இளைஞர் ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த பயணி ரூ. 10 கோடி மதிப்பிலான மண் இல்லாமல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்படும் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்த அதிகாரிகள், தனி இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!