Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசாரிக்க முடியாது” ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி…உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், “இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்பதால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி அமர்வு, “அவசர வழக்காக விசாரிக்க முடியாது. வழக்கமான பட்டியலின்படி உரிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ராமதாஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதை எதிர்த்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீது இதுவரை விசாரணை நடைபெறாத நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு கோரியிருந்தது.ஆனால் தலைமை நீதிபதி அமர்வு இந்தக் கோரிக்கையை நிராகரித்து,

வழக்கை சாதாரண பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவு, தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

மேலும், இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.தேர்தல் ஆணையம் ஏற்கனவே மாம்பழம் சின்னத்தை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பின் மேல்முறையீடு மீதான இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!